×

இந்தியா-வியட்நாம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த செயல் திட்டம்: மோடி அறிவிப்பு

புதுடெல்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்ஹ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல தரப்பு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாமுக்கு ஒப்பு கொள்ளப்பட்டபடி ரூ.2512 கோடி கடன் வழங்கப்படும். இது அந்த நாட்டின் கடல் பாதுகாப்பை பலப்படுத்தும்.

இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய செயல் திட்டத்தை இருவரும் ஏற்று கொண்டுள்ளோம். சுதந்திரமான, திறந்த விதிகள் அடிப்படையிலான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரு தரப்பினர் இடையே ஒத்துழைப்பைத் தொடரும். வியட்நாம் நமது கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையின் படி இந்தியாவின் முக்கிய பங்காளியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு தசாப்தத்தில் இந்தியா-வியட்நாம் இடையேயான உறவுகள் விரிவடைந்துள்ளன. நாங்கள் வளர்ச்சியை ஆதரிக்கிறோம், விரிவாக்கத்தை அல்ல. இவ்வாறு மோடி கூறினார். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் தனது ஆளுகையை விரிவாக்க முயற்சித்து வருவது குறித்து பல்வேறு நாடுகள் கவலை வெளியிட்டு வரும் நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியா-வியட்நாம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த செயல் திட்டம்: மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Vietnam ,Bam Minh Singh ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED வேலையில்லா நெருக்கடிக்கு தீர்வு காண தவறிய மோடி 3.0: காங். விமர்சனம்