சுதந்திர தின விழாவையொட்டி கோயில்களில் பொது விருந்து

மதுரை: சுதந்திர தினத்தினை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன், மற்றும் அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பொது விருந்து நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பொது விருந்து நடைபெற்றது. இதற்கு முன்பாக கோயிலுக்கு காணிக்கையாக வந்த நூல்புடவைகள் மற்றும் வேஷ்டிகளை கோயில் சார்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் ஆதரவற்றோர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் பி.கே.எம்.செல்லையா, சுப்புலெட்சுமி, இணை கமிஷனர் கிருஷ்ணன், கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பொது விருந்து மற்றும் கூட்டு பிராத்தனை திருக்கோயில் எதிரே உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பக்தர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி தலைவர் குமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், அ.வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு கள்ளழகர் ேகாயிலுக்கு பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைமேல் உள்ள நூபுர கங்கையில் நீராடி ராக்காயி அம்மனை வழிபட்டனர். பின்னர் மலையில் உள்ள ஆறாம்படை வீடான முருகன் கோயிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் லதா கண்ணன், பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கவுன்சிலர்கள் குருசாமி, கொத்தாளம் செந்தில்வேல், செல்வராணி ஜெயராம், கோயில் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, செயல் அலுவலர் இளமதி, பெரியசாமி, செங்குட்டுவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் நடந்த கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்தில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

* பேரையூரை அடுத்த மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுதந்திர தின விழாவையொட்டி கோயில்களில் பொது விருந்து appeared first on Dinakaran.

Related Stories: