×

முன்விரோத தகராறில் பெட்ரோல் குண்டு வீசி இருவருக்கு வெட்டு:6 பேருக்கு வலை

வேளச்சேரி: பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (31). பள்ளிக்கரணை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோஸ்வா மற்றும் பிரவீன் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன், ஷியாம், அரவிந்த், பிரசன்னா, சிவா ஆகியோர் நேற்று முன்தனம் மாலை ஹரிபிரசாத் வீட்டிற்கு சென்று 3 பெட்ரோல் குண்டுகளை ஹரிபிரசாத் வீட்டின் மீது வீசியுள்ளனர். சத்தம் கேட்டு ஹரிபிரசாத் மற்றும் இவரது நண்பர் மடிப்பாக்கத்தை சேர்ந்த தீபக் (28) ஆகியோர் வெளியில் வந்து பார்த்தபோது, அரிவாளால் இருவரையும் சரமாரி வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர்.

 

The post முன்விரோத தகராறில் பெட்ரோல் குண்டு வீசி இருவருக்கு வெட்டு:6 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Hari Prasad ,Bhavani Amman Temple Street ,Pallikaranai ,Joshua ,Praveen ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...