×

ஐதராபாத்தில் இன்று சன்ரைசர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் மோதல்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 55வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. டெல்லி இது​வரை 10 போட்டியில் 6 வெற்​றி, 4 தோல்வி​ என 12 புள்​ளி​களுடன் 5வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டியில் குறைந்தது 2 போட்டியில் வென்றால் தான் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும்.

கடைசி 2 போட்டியில் ஆர்சிபி, கேகேஆரிடம் வீழ்ந்த நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி, பிளே ஆப் வாய்ப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் போரல், டூ பிளெஸ்​ஸிஸ், கருண் நாயர், கே.எல்​.​ராகுல், அக்​சர் படேல், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், விப்​ராஜ் நிகம் பலம் சேர்க்​கின்​றனர். பந்​து​வீச்​சில் ஸ்டார்க், முகேஷ் குமார், அக்​சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படவேண்டும். இன்று தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மறுபுறம் சன்ரைசர்ஸ் 10 போட்டியில் 3 வெற்​றி, 7 தோல்வி ​என 6 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்று கவுரவமக வெளியேறும் எண்ணத்தில் உள்ளது.பேட்டிங்கில் டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷான், ஹென்​ரிச் கிளாசன், அனிகேத் வர்​மா, நிதிஷ் குமார் டெல்லி பவுலர்களுக்கு நெருக்கடி அளிப்பர்.

பந்​து​வீச்​சில் முகமது ஷமி, ஜெயதேவ் உனத்​கட், கேப்டன் பாட் கம்​மின்​ஸ், ஹர்​ஷல் படேல் என சிறந்த வீரர்கள் இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாததும் பின்னடைவாக உள்ளது. இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

The post ஐதராபாத்தில் இன்று சன்ரைசர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,Delhi Capitals ,Hyderabad ,league ,Hyderabad Rajiv Gandhi International Stadium ,IPL Series ,Delhi ,Dinakaran ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்