இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் 7 மணி நேரம் செலவழிப்பதாகவும், ஆண்கள் மூன்றரை மணி நேரம் மட்டுமே செலவழிப்பதாகவும் புதிய தரவு வெளியீடு..!!

 

சென்னை: இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் 7 மணி நேரம் செலவழிப்பதாகவும், ஆண்கள் மூன்றரை மணி நேரம் மட்டுமே செலவழிப்பதாகவும் புதிய தரவு வெளியாகியுள்ளது. சமையல் வீட்டை சுத்தம் செய்வது, துணிகள் துவைப்பது, வீட்டு பராமரிப்பு, பல சரக்கு வாங்குதல், குழந்தைகளை கவனித்தல் வீட்டிலுள்ள நோயாளிகள், முதியோர்கள் பராமரிப்பு போன்ற வேலைகள் பெரும்பாலும் வீட்டிலுள்ள பெண்களின் வேலையாகவே காலம், காலமாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் சும்மா இருப்பவர்கள் என்று பல நேரங்களில் கிண்டல் செய்யப்படும் பெண்கள் தான் அதிக அளவு தங்கள் உழைப்பை தருகிறார்கள். இது தொடர்பாக சர்வே ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய மாதிரி சர்வே அலுவலக தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் கல்வியில் பெண்களின் விகிதம் அதிகமாக இருந்தும் தொழில் மற்றும் வேலை சூழல்களில் பெண்களின் பங்கேற்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே சென்று வேலை செய்து சம்பாதிக்காத பெண்கள் வீட்டில் சராசரியாக 7 மணி நேரம் வீட்டு வேலைகளில் கழிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. படித்து வெளியே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்தேமுக்கால் மணி நேரம் வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள். வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் ஆண்கள் வீடு வேலைகளில் மூன்றரை மணி நேரமே ஈடுபடுகிறார்கள். திருமணமாகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு வீடு வேலைகளின் நேரம் கூடுதலாக உள்ளது. திருமணமான ஆண்களோ வீடு வேலைகளில் குறைவான நேரமே செலவிடுவதாக தரவுகள் கூறுகின்றன.

The post இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் 7 மணி நேரம் செலவழிப்பதாகவும், ஆண்கள் மூன்றரை மணி நேரம் மட்டுமே செலவழிப்பதாகவும் புதிய தரவு வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: