பெரம்பூர்: கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் உள்ள ஜிஎன்டி சாலையில் க்ளோரி என்பவர் ஜீவம் அப்பம் என்ற திருச்சபை நடத்தி வருகிறார். முதல் தளத்தில் திருச்சபையும், தரை தளத்தில் வீடும் உள்ளது. நேற்று காலை, சர்ச்சில் தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ பரவி வீடும் பற்றி எறிந்தது. அங்கிருந்தவர்கள் வெளியே ஓடிவந்ததால் உயிர் தப்பினர். தகவலறிந்து மாதவரம், செம்பியம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீடு, சர்ச்சில் தீவிபத்து appeared first on Dinakaran.