ஓசூர் வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வனத்துறை அலுவலகத்திற்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது. ஓசூர் அடுத்த அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவர் சேர்ந்து மொத்தம் மூன்று நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதை கண்ட அப்பகுதி வனத்துறை காவல்துறை அதிகாரிகள், அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீக்காமல் சிறிது தூரம் சென்று நிலைதடுமாறி இருசக்கர வாகனகத்தில் இருந்து மூன்று பெரும் கிளே விழுந்துள்ளனர், இதனை அடுத்து ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையில் ஓடினர், இதில் ஒருவர் மட்டும் புதருக்குள் சென்றுள்ளார் அதாவது வெங்கடேஷ் என்பவர் மட்டும் புதருக்குள் ஓடி மறைந்துள்ளார்.

அவரை சுற்றி வளைத்த வனத்துறை காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் சற்று தடுமாறி, சற்று மூச்சி பிடித்து பேசிக்கொண்டிருந்துள்ளார், ஆனால் அவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டபோது அதிகாரிகள் தண்ணீரும் கொடுத்துள்ளார்கள், ஆனால் இதனை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்து வெங்கடேஷ் என்பவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால் வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் கிராம மக்கள் வனசோதனை சாவடியில் தீ வைத்து சூறையாடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டுள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் இங்கு நடத்தக் கூடாது என்று அவர்களிடம் கண்டிப்புடன் பேசினார், இருந்தாலும் வெங்கடேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார், அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும், அதேபோல் பூமரத்து கிராமத்தில் உள்ள அப்பகுதியில் உள்ள வனசோதனை சாவடியை அகற்ற வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஓசூர் வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: