ஹூக்கா பார் திறக்க தடை

சென்னை: தமிழகத்தில் புகைக்குழல் கூடம் எனப்படும் ஹூக்கா பார் நடப்பதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகைக்குழல் கூடங்களால் (ஹூக்கா பார்) பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து ஹூக்கா பார்களுக்கு தடை மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உணவுக்கூடம் உள்பட எந்த இடத்திலும் ஹூக்கா பார் திறக்கவோ, நடத்தவோ கூடாது. இதை மீறினால் 1 ஆண்டுக்கு குறையாத 3 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்துக்கு குறையாத, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post ஹூக்கா பார் திறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: