இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (11.08.2023) மட்டுமே. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.