×

கரகதஅள்ளி சாலையின் தரைப்பாலத்தில் விழுந்த ஓட்டை

*சீரமைக்க வலியுறுத்தல்

பாலக்ேகாடு : பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளியில் இருந்து செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையில் தரைப்பாலம் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள் பாலத்தின் ஓட்டையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஓட்டையினுள் விழுந்து உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உடைந்த பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நிதி நிலையை காராணம் காட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரகதஅள்ளி சாலையின் தரைப்பாலத்தில் விழுந்த ஓட்டை appeared first on Dinakaran.

Tags : Karakatalli Road ,Palakkad ,Karakatalli ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்