இந்தி படிக்க வேண்டும் என்றால் இந்தி பிரச்சார சபா சென்று கற்றுக்கொள்ளுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நேற்று பல்லாவரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில், என்னை தமிழக அரசு இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டது என்று வாய்ப் கூசாமல் பொய் சொன்னார். நாங்கள் யாரையும் இந்தி படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. மாறாக இந்தியை திணிக்க கூடாது என்றுதான் சொல்கிறோம். உங்களுக்கு இந்தி படிக்க வேண்டும் என்றால் உங்களது பாஜ தலைமை அலுவலகம் அமைந்துள்ள இந்தி பிரச்சார சபா சென்று தாராளமாக இந்தி கற்றுக் கொள்ளலாம். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, தமிழகத்தில் சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ திணிக்கக் கூடாது என்று தான் கூறுகிறோம். ஏனென்றால் இது பெரியார் மண். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை தீர்மானிக் குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலெட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் படப்பை மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், பம்மல் மண்டலக் குழு தலைவர் வே. கருணாநிதி, குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் பம்மல் வடக்குப் பகுதி திமுக செயலாளர் ஜெயக்குமார் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விசுவநாதன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம்,
தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, அன்புச் செழியன், ஆதிமாறன், அன்புசெல்வன் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், அகரம்தென் ஊராட்சி மன்ற தலைவர் சி.கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்ட் பிரகாஷ், பகுதியை செயலாளர்கள் இ.எஸ்.பெர்னாட், செம்பாக்கம் இரா.சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், ஏ.கே.கருணாகரன், திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் நகரச் செயலாளர் டி.பாபு, மாவட்ட இளைஞர் அணியை சேர்ந்த ஜானகிராமன், இம்சமாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post இந்தி படிக்க வேண்டும் என்றால் இந்தி பிரச்சார சபா சென்று கற்றுக்கொள்ளுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: