வடமாநிலங்களை புரட்டிப்போட்ட பெருமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!!

டெல்லி : வடமாநிலங்களை புரட்டிப்போட்ட பெருமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த மழை கொட்டி வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சாலைகளை அடித்துச் சென்றுவிட்டது. நிலச்சரிவில் சிக்கி மத்திய பிரதேசத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களையும் கனமழை புரட்டிபோட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து மணாலியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துவிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் யமுனை மற்றும் கங்கை ஆறுகளில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு பாய்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சிக்கி ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 5 நாட்களுக்கு பிறகு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெருமழை தொடர்பான விபத்துக்கள்,நிலச்சரிவுகள், வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் 21 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து ஜூலை 8ம் தேதி முதல் மழை, வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

The post வடமாநிலங்களை புரட்டிப்போட்ட பெருமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: