×

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.9.60 லட்சம் அபராதம்..!!

சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.9.60 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உத்தரவிட்டது. இசிஆர் சாலையில் உள்ள ஒடியூர் குளத்தில் விதிகளை மீறி மண் கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலப்பணிகளின்போது கடலோர மண்டல விதிகளை மீறி மண்ணை கொட்டி வைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியரின் புகார் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.9.60 லட்சம் அபராதம்..!! appeared first on Dinakaran.

Tags : National Highways Commission ,Chennai ,Tamil Nadu Coastal Regulatory Zone Commission ,Odyur pond ,ECR Road ,National Highway Commission ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்