அரியானா பதற்றம் குறையாததால் இணைய சேவை தடை நீடிப்பு

சண்டிகர்: அரியானா வன்முறை பதற்றம் குறையாததால் இணைய சேவைக்கான தடை வரும் 8ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அரியானா மாநிலம் நுஹ், பல்வால் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடந்த ஜூலை 31 அன்று இரு சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்தால், இரண்டு ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொய் ெசய்திகளை பரப்புவதை கட்டுப்படுத்த இணைய சேவைகள் தடை செய்யப்பட்டன. பொது அமைதி திரும்பி வருவதால் அங்கு படிப்படியாக ஊடரங்கு தளர்த்தப்படுகிறது.

நேற்றுடன் இணைய சேவை நிறுத்தப்பட்டதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது மேலும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) டிவிஎஸ்என் பிரசாத் வெளியிட்ட அறிவிப்பில், ‘ நுஹ், பல்வால் ஆகிய மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை இணைய சேவைகளுக்கான தடை நீடிக்கப்படுகிறது. அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்த பின்னர், தடைகள் படிப்படியாக தளர்த்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

The post அரியானா பதற்றம் குறையாததால் இணைய சேவை தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: