×

ஹார்வர்ட் பல்கலையில் சர்வதேச மாணவர்களுக்கு தடை டிரம்ப் உத்தரவை நிறுத்தி வைத்தது அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர்.இந்த பல்கலைகழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இது அதிபர் டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.கடந்த மே மாதத்தில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதற்கான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சான்றிதழை ரத்து செய்தது. இந்த நிலையில் கடந்த புதனன்று ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். தேசியப் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் நடவடிக்கை சட்ட விரோத பழிவாங்கல் ஆகும் என்று கூறி ஹார்வர்ட் பல்கலைகழகம் பாஸ்டன் பெடரல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதி டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

The post ஹார்வர்ட் பல்கலையில் சர்வதேச மாணவர்களுக்கு தடை டிரம்ப் உத்தரவை நிறுத்தி வைத்தது அமெரிக்க நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : US ,Trump ,Harvard University ,Washington ,Palestine ,President Trump ,Department of Homeland Security ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற...