நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம்போல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு வந்து குருவாயூர் நோக்கி புறப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே செல்லும்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் 50 வயது பெண் இறந்து கிடப்பதை திருச்சூர் ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். அவரது கைப்பையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்காக ரயில் டிக்கெட் இருந்தது. இதை வைத்துக் கொண்டு திருச்சூர் ரயில்வே போலீசார், இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து பயணித்த காரணத்தால், இவ்விரு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்து இறந்த பெண் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் சடலம் appeared first on Dinakaran.