The post அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் வெளியீடு appeared first on Dinakaran.
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட கணக்கு தாட்கள் தொகுக்கப்பட்டு இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘cps.tn.gov.in/public’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.