நெல்லிக்காய் ஜூஸ்

தேவையானவை:

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – 1 கப்,
சர்க்கரை – 3 டீஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
சோம்பு -1/2 டீஸ்பூன்,
உப்பு – சிட்டிகை,
தண்ணீர் – 2 டம்ளர்.

செய்முறை:

நெல்லிக்காய், இஞ்சி, சோம்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனை 2 டம்ளர் தண்ணீரில் நன்கு கலந்து வடிகட்டி பருகவும். சுவையான நெல்லி ஜூஸ் தயார். இது காயகல்பம். செல்களை புதுப்பிக்கும். இதனை பெரிய நெல்லிக்காயிலும் செய்யலாம்.

The post நெல்லிக்காய் ஜூஸ் appeared first on Dinakaran.