கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53.720 விற்பனை


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53.720-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.93.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முந்தையநாள் 26ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனை ஆனது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.53,560க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53.720-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715க்கு விற்பனையாகிறது.

The post கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53.720 விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: