தங்கம் சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: இஸ்ரேல் போர் தாக்கத் தால் தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், சற்று குறைவதுமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,585க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,680க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 வரை அதிகரித்தது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

அதாவது, நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,660க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,280க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த ஜெட் வேக விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: