இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனையானது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மகிழ்ச்சி என்பது ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.72,360க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு appeared first on Dinakaran.
