அந்தக் கடிதத்தைத்தான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தை படித்தாலே, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆனால், தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. மருத்துவம் பயின்ற ஐயா திரு.அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல், அவதூறு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.