The post ஜிமெயிலில் கூகுள் சாட்பாட் பார்ட் அறிமுகம் appeared first on Dinakaran.
ஜிமெயிலில் கூகுள் சாட்பாட் பார்ட் அறிமுகம்

புதுடெல்லி: கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை, ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்கு அறிமுகம் செய்துள்ளது. ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட்டின் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய போட்டி அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் கூகுள் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான பார்ட் என்னும் சாட்பாட்டை அறிமுகம் செய்தது. பாரட் சேவையை ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் மேப், யூ டியூப் உள்ளிட்ட இணைய தளங்களிலும் பயன்படுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஜிமெயில் கணக்குகளில் உட்பொதிக்கப்பட்ட தங்களது தகவல்களை அணுகுவதற்கு சாட்பாட்டை பயன்படுத்தலாம், கூகுள் வரைப்படத்தில் இருந்து திசைகளை பெறவும் மற்றும் யூடியூப்பில் பயனுள்ள வீடியோக்களை கண்டறியவும் பயன்படும். மேலும் கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தகவல்களை பிரித்தெடுப்பதற்கும் சாட்பாட் உதவும்.