×
Saravana Stores

ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தையின்மை, உடல்பருமன், தைராய்டு பிரச்னை, மூட்டுவலி என ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். ஹார்மோன் சுரப்புகளை சீராக வைத்துக் கொண்டால், பல பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், ஹார்மோனை சீராக வைக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.புரதம் உடல் வளர்ச்சிக்கும் உடலில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம் தேவை. புரதச்சத்து குறைந்தாலும் அதிகரித்தாலும் பாதிப்பு உண்டாகும். உடலில் சில ஹார்மோன்கள் உருவாக்கத்தில் இதற்கு பங்கு உண்டு என்பதால் தினமும் நம் அன்றாட உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.தினசரி உணவில் நட்ஸ், தயிர், பால், செக்கில் ஆட்டும் எண்ணெய்கள், கீரைகள், பழங்கள், பல வண்ண காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம்.

இதனால் ஹார்மோன் சுரப்புகள் சீராக இயங்கும். இன்சுலின், கிரெலின், லெப்டின் என்னும் ஹார்மோன்களின் சீரான சுரப்புக்கு இவை உதவும்.ஆளி விதைகள், இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இதில் கரையாத நாச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. அவகோடா பழங்கள், இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கார்டிசோலை சமப்படுத்த உதவும்.

செர்ரி பழங்கள், இது மெலடோனின் நிறைந்த உணவு. இது அமைதியான தூக்கத்திற்கு உதவும். ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தும். செர்ரிகளில் உள்ள மெக்னீசியம் நம் உடலின் அட்ரினலின் அளவை கட்டுப்படுத்த உதவும்.புராக்கோலி, முட்டைக் கோஸ், காலிபிளவர் ஆகியவை ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் திறன் பெற்றவை. இவை நம் மனநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது.

ஆப்பிள், குர்செடின் என்னும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். இது தவிர, க்ரீன் டீ, கீரைகள், பட்டாணி பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், எள், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், மஞ்சள், லவங்கப்பட்டை, சோம்பு மற்றும் இஞ்சி நான்கையும் எடுத்து நீரில் கொதிக்க வைத்து குடிக்க ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.

தவிர்க்க வேண்டியவை: வெள்ளை

சர்க்கரை, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்வதால் ஹார்மோன் பிரச்னைகள் உண்டாகும்.

தொகுப்பு: ரிஷி

The post ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!