பின்னர், அவர் பேசுகையில், ‘‘கடல் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும், 2050ம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அதேசமயம் கடலில் உள்ள பிளாஸ்டிக்கை மீன்கள் உண்ணும். அந்த மீன்களை நாம் உட்கொள்ளும்போது நமக்கு புற்று நோய் வரும் அபாயம் உண்டு. எனவே, கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீன் உண்டால் 15% இதய பாதிப்பு குறைவாக ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன’’ என்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
The post 2050ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை தகவல் appeared first on Dinakaran.
