ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடி

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை விவரங்களை சிஜிஏ நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையாக ரூ.17.86 லட்சம் கோடியாக, அதாவது ஜிடிபியில் 5.9 சதவீதம் இருக்கும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

இதில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடியாக உள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கில் 45 சதவீதமாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் நிதிப்பற்றாக்குறை 45.6 சதவீதமாக இருந்தது. மேற்கண்ட 7 மாதங்களில் ஒன்றிய அரசுக்கு ரூ.15.9 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுபோல் மேற்கண்ட காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் மொத்த செலவு ரூ. 23,94 லட்சம் கோடி.

The post ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Related Stories: