இந்நிலையில் கடந்த ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த ராமதாஸ் இரவு வழக்கம் போல் தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் விக்னேஷ் வேலைக்குச் செல்வதற்காக தந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையை தட்டியுள்ளார். அப்போது ராமதாஸ் கதவைத் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், பின் பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது மின்விசையில் ராமதாஸ் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது ராமதாஸ் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post மகள் இறந்த துக்கம் தாளாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை: காக்களூரில் சோகம் appeared first on Dinakaran.