×

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நான் பேமஸ் ஆகிவிட்டேன்: லஷ்கர் தளபதி பகிரங்க பேச்சு

லாகூர்: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாகூரில் நடந்த ஒரு பேரணியில் லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து நான் மிகவும் பிரபலமானேன். உங்களின் தோட்டாக்களுக்கு நாங்கள் பயப்படவில்லை.

நாங்கள் தோட்டாக்களுக்கு பயப்படுகிறோம் என்று மோடி நினைத்தால் அவர் தவறாக நினைக்கிறார். 1971 போரில் ஏற்பட்ட தோல்விக்கும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பாகிஸ்தான் துண்டாடப்பட்டதற்கும் இப்போது பாகிஸ்தான் பழிவாங்கி விட்டது. அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவதை மக்கள் ஆதரிப்பார்கள். பாகிஸ்தானையும் குறிப்பிட்ட தனிநபர்களையும் தனிமைப்படுத்த இந்தியா நிறைய முயற்சித்தது, ஆனால் இப்போது அவர்கள்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நான் பேமஸ் ஆகிவிட்டேன்: லஷ்கர் தளபதி பகிரங்க பேச்சு appeared first on Dinakaran.

Tags : Pahalgam attack ,Lashkar ,Lahore ,e- ,Taiba ,Pahalgam ,Kashmir ,Talha Saeed ,Hafiz Saeed ,Pahalgam… ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான வரிகளை நீக்க...