×

கணவனுக்கு பதிலாக மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: பெண் ஊழியர்கள் பரிந்துரைக்க ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: அரசு பெண் ஊழியர்கள் தங்கள் மறைவுக்குப் பிறகு கணவருக்கு பதிலாக தகுதியான மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, ஒன்றிய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் ஒரு திருத்தத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது.விவாகரத்து நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு இந்த திருத்தம் தீர்வு காணும்’’ என்றார்.

The post கணவனுக்கு பதிலாக மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: பெண் ஊழியர்கள் பரிந்துரைக்க ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : EU government ,New Delhi ,EU ,
× RELATED விலைவாசி உயர்வு; ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: முத்தரசன்