சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ. 1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரிசி அட்டை வைத்திருந்தவர்களிலேயே பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில் அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ரூ.1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
The post அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ. 1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.