தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பர்னிச்சர் மோசடி; முன்னாள் டிஜிபி ரவி சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார்..!!

சென்னை: தனது பெயரில் சிலர் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் டிஜிபியும் தாம்பரம் முன்னாள் காவல் ஆணையருமான ரவி, சென்னை சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி ரவி ஓய்வுபெற்ற பிறகும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவருடைய சமூக வலைதள பக்கத்தில் உடற்பயிற்சிகள் செய்வது தொடர்பாகவும், இளைஞர்களிடம் பல நல்ல கருத்துக்களை கூறுவது தொடர்பாகவும் பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே ரவியின் நண்பர்கள் ஏராளமானோருக்கு போலி அக்கவுண்ட்டில் இருந்து பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட் அளித்து அவர்களிடம், ரவி பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், மிகவும் நன்றாக உள்ளதால் அதனை வாங்குமாறு பரிந்துரை செய்வது போன்றும் மெசேஜ் வந்துள்ளது. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி, உடனடியாக இது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது புகைப்படத்தை வைத்து போலியான பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி ஒரு கும்பல் மோசடி செய்வதாக ரவி சென்னை சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிக்வாக இருப்பவர்களின் கணக்கு விவரங்களை வைத்துக்கொண்டு பல மோசடி கும்பல் பல்வேறு மோசடியில் ஈடுபடுவதாகவும், தற்போது புதிய மோசடியாக பர்னிச்சர் பொருட்களை வாங்குவதற்கு பரிந்துரை செய்வது போன்று மோசடி அரங்கேற்றி வருவதாகவும் முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்திருக்கிறார். மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பர்னிச்சர் மோசடி; முன்னாள் டிஜிபி ரவி சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: