100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஆதார் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும்போது அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பிப்ரவரி 1ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், மார்ச் 31ம் தேதியும், அதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதி என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள 90 சதவீத பணியாளர்களின் வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

The post 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஆதார் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: