பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பதிவு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்தல் – பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல தலைமை பொறியாளர் (பொ.ப.து) எழுதிய கடிதத்தில்; பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து பதிவு செய்ய அரசாணை எண்:1529, Home Dept., நாள்:03.05.1963 மற்றும் அரசாணை எண்:1848, பொதுப்பணித் துறை, நாள்:26:10.1972 இல் வழிவகை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசாணை எண்:1529, Home Dept., நாள்:03.05.1963 மற்றும் அரசாணை எண்.1848, பொதுப்பணித்துறை, நாள்:26.10.1972 இன் படி பட்டியல் இனத்தவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க தெரிவிக்கப்படுகிறது. இந்த தெளிவுரைகளை ஒப்பந்த பதிவு செய்யும் அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: