
ஈரோடு: ஈரோட்டில் பிளஸ் 2 மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு குமலன்பேட்டை அரசுப் பள்ளி மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக இரண்டு மாணவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.
The post ஈரோட்டில் பள்ளி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.
