×

மக்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும், உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.

கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?. எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மக்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,President ,Nayinar Nagendran ,Chennai ,BJP ,Tirunelveli ,Tenkasi ,Virudhunagar ,Thamiraparani River ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்