சென்னை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக்., இடங்களில் சேர்வதற்கு 2,48,848 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் கட்டணம் செலுத்துதல், சான்றிதழ்களை பதிவேற்றம் போன்றவற்றை வரும் 12 ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.