×

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முடிகிறது

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று நிறைவடைய உள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் இளங்கலை படிப்புக்கு விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. அந்த வகையில் இன்றுடன் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஆகும். நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 73 விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அதில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 301 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 49 ஆயிரத்து 737 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருக்கின்றனர். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 9ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து வரும் 26ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

The post இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முடிகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்