மும்பை: எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க மென்பொருளை தந்ததால் இஸ்ரேலை பாஜக ஆதரிப்பதாக சிவசேனை கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும் தொழில்நுட்பத்தை தந்தா இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருவதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது: “அஸ்ஸாம் முதல்வர் இருக்கும் கட்சி ஹமாஸை விடக் குறைவானது அல்ல… அவர் முதலில் வரலாற்றைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். அவர் பாஜகவில் இருந்தால், பாலஸ்தீனம்-இஸ்ரேல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பங்கு என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை என்சிபி தலைவர் சரத் பவார் விமர்சித்ததால் மகாராஷ்டிரா அரசியலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. என்சிபி தலைவர், “இந்தியாவின் அனைத்து முன்னாள் பிரதமர்களும் பாலஸ்தீனத்துடன் உறுதியாக நின்றார்கள்.
ஆனால் தற்போது பாஜகவினர் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க மென்பொருளை தந்ததாலும், மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும் தொழில்நுட்பத்தை தந்தாலும் தான் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
The post மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும் தொழில்நுட்பத்தை தந்ததால் இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது: சஞ்சய் ராவத் பேட்டி appeared first on Dinakaran.