×

கூடுதலாக மின்சாரம் வாங்கியது குறித்து விசாரிக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் 2023-24ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதில் ஒளிந்து கிடக்கும் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக 2023-24ம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post கூடுதலாக மின்சாரம் வாங்கியது குறித்து விசாரிக்க அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்