×

மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மின் பொறியாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையிலான 6 பேர் குழுவினர், செங்கல்பட்டு வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, கணினி மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மின் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களிடமும் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையில் ஆவணங்கள் அல்லது கணக்கில் வராத பணம் சிக்கியதா என கேட்டதற்கு, அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : -corruption ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு