தேர்தல் விதிமீறல் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம், ஏப்.5: காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16ம்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தேர்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 16ம்தேதி முதல் ஏப்.3ம்தேதி வரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திமுக 7, அதிமுக 5, பாமக 3, நாம் தமிழர் கட்சி 2, காங்கிரஸ் 1, தேமுதிக 3, பாஜ 1, மற்ற கட்சிகள் 3 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் விதிமீறல் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: