×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை; தென்மாநில தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர் பங்கேற்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 18ம் தேதி (சனி), 19ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவு தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு மற்றும் அதற்கான ஆயத்த பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை; தென்மாநில தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chennai ,South State Election ,South State Election Officers ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய...