இதில் ஒரு பகுதியாக திருத்தணியில் வருவாய் துறை சார்பில் நேற்று காலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை பைபாஸ் சாலை சந்திப்பிலிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் கொடிய அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, மாபொசி சாலை வழியாக 2 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமாக சென்று முடிவில் நகராட்சி அலுவலகம் அருகே நிறைவு செய்யப்பட்டது. இதில் திருத்தணி வட்டாட்சியர் மதியழகன், காவல் ஆய்வாளர் மதியரசன், உதவி காவல் ஆய்வாளர் ரக்கிகுமாரி, வருவாய் ஆய்வாளர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.