என்றாவது ஒரு நாள் நீதி வெல்லும். எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டிய ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன். பழனிசாமி ஏற்றுக்கொண்டால் அவரோடு இணைவேன் என்ற இழிநிலைக்கு எப்போதும் செல்லமாட்டேன். ஏற்கனவே டிடிவி தினகரனோடு ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சசிகலா எங்களோடு இணைவது குறித்து அவரே முடிவெடுப்பார். மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை (இன்று) நேரில் செல்வதால் கரூர், திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
The post எடப்பாடி சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன்: ஓபிஎஸ் appeared first on Dinakaran.