குடிநீர் தட்டுப்பாடு; அதிகாரிகள் அலட்சியம் நகராட்சி முன்பு கவுன்சிலர் தர்ணா

செங்கல்பட்டு: குடிநீர் வழங்கவில்லை என செங்கல்பட்டு நகராட்சி முன்பு கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட தட்டான்‌மலை தெரு, படிக்கட்டுத்தெரு, நாசர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மலைப்பகுதி என்பதால் அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அதை சீர்செய்து குடிநீர் வழங்கப்பட்டு ஓரளவு சீர் செய்யப்படும். ஆனால், தற்போது கோடைகாலம் துவங்கியதிலிருந்தே இந்த வார்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி அலுவலகம் முன்பு 9வது வார்டு உறுப்பினர் நகராட்சி அலுவலம் முன்பு அமர்ந்து 9வது வார்டு உறுப்பினர் செங்கை இரா. தமிழரசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து விசிக 9வது கவுன்சிலர் தமிழரசன் கூறுகையில், தொடர்ந்து 2 மாதமாக நகராட்சி ஆணையரிடம் புகாரளித்து வருகிறேன். அன்றிலிருந்து இன்று வரை மோட்டார் பழுதாகிவிட்டது, வயர் அறுந்து விட்டது. ஸ்ட்டாட்டர் பழுதாகி விட்டது என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் தாழ்த்தி வருகிறார்கள். கடந்த இரண்டு தினங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முற்றிலும் தண்ணீர் விநியோகம் இல்லை’ என்றார்.

The post குடிநீர் தட்டுப்பாடு; அதிகாரிகள் அலட்சியம் நகராட்சி முன்பு கவுன்சிலர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: