சென்னை: தோல் சிகிச்சைக்கான உலகின் சிறந்த இளம் மருத்துவருக்குரிய விருது சென்னையை சேர்ந்த தினேஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. கடந்த நூற்றாண்டு கால வரலாற்றில் முதன்முறையாக இந்தியர் ஒருவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற தோல் சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.