×

அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களை பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது புரிய போவதில்லை: நடிகர் விஜய்க்கு திமுக மாணவர் அணி செயலாளர் கடும் கண்டனம்

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இன்று வெளியிட்ட அறிக்கை: உங்களை போல சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களை பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என புரிய போவதில்லை. நடிகர் விஜய், நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல. நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறது. கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளை பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்க தொடங்கியிருப்பதன் மூலம் நீங்களும் அந்த அயோக்கிய கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர் விஜய்.

உங்களை போல சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களை பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என புரிய போவதில்லை. உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதை பார்க்கத்தான் போகிறோம்.

The post அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களை பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது புரிய போவதில்லை: நடிகர் விஜய்க்கு திமுக மாணவர் அணி செயலாளர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Iokis ,Dimuka Student Team ,Vijay ,Chennai ,Rajiv Gandhi ,Ayokees ,Neet ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்