The post திமுக எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.
திமுக எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியது

காங்கயம்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நிரவி திருபட்டினம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் நாகதியாகராஜன் (45). இவர் நேற்று காலை காரைக்காலில் இருந்து தனது காரில் குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். காரை ஒட்டுநர் கணேஷ் (42) ஓட்டி வந்தார். அவர்களது கார் காங்கயம் வழியாக வந்து கொண்டிருந்தது. காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே வந்தபோது பெருந்துறையிலிருந்து பழனியை நோக்கி சந்தோஷ் (29) என்பவர் ஓட்டி வந்த காரும், எம்எல்ஏ வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு தரப்பிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.