பின்னர் அங்கு நடந்த விழாவில் சென்ைன கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 500 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 பொற்கிழி மற்றும் 500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுகவிற்கு வியர்வை, ரத்தம் சிந்திய திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை வழங்குவதில் மகிழ்ச்சி. என்னுடைய பிறந்த நாளில் நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால் சேகர்பாபு மட்டும் விதிவிலக்கு. நீங்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இல்லாமல் கலைஞர் கிடையாது. இந்த இயக்கம் கிடையாது. உங்களிடம் வாழ்த்து வாங்க வந்துள்ளேன். வரும் டிசம்பர் 17ம் தேதி இளைஞர் அணியின் மாநாடு நடைபெற உள்ளது. அது வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் வாழ்த்துகள் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வரா?
தொடர்ந்து நிருபர்கள், ‘‘சென்ற பிறந்த நாளுக்கு அமைச்சராக வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த பிறந்த நாளுக்கு துணை முதல்வர் ஆக வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளதே’’ என்று கேட்டனர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘நான் துணை முதல்வர் ஆக வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வாருங்கள். இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நான் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை இல்லை, செய்தியாளர் உங்களுடைய கோரிக்கை’’ என்றார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.24.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார். அவருக்கு லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் பூக்கள் வழங்கியும், கைக்குலுக்கியும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
The post திமுகவிற்கு வியர்வை, ரத்தம் சிந்திய மூத்த முன்னோடிகளுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ேபச்சு appeared first on Dinakaran.