×

நியூயார்க் மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை: சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டார்

நியூயார்க்: தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரி இந்திய வம்சாவளிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். நியூயார்க் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியான ஜெனிபர் ராஜ்குமார் முயற்சியின் மூலம் நியூயார்க் சட்டப்பேரவையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நியூயார்க் நகரில் உள்ள பொது பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை விடப்படும் என நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி, வடக்கு அமெரிக்காவின் இந்து கோயில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வரவேற்பில் பங்கேற்ற நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சல், தீபாவளிக்கு விடுமுறை விடும் சட்டத்தில் கையெழுத்திட்டார். அவர் கூறுகையில், ‘‘இந்த சட்டம், உலகம் முழுவதிலும் உள்ள பாரம்பரியங்களைப் பற்றி அறியவும் கொண்டாடவும் எங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்’’ என்றார். நியூயார்க்கில் உள்ள 10.47 லட்சம் மாணவர்களில் 16.5 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.

The post நியூயார்க் மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை: சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டார் appeared first on Dinakaran.

Tags : Diwali ,New York ,New York City ,Diwali.… ,
× RELATED மனித மூளைச் சுற்றுகளை செயற்கையாக...